Vaarayo Vaarayo歌词
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே
வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
· இசை ·
இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்
உன்கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்
ஓலைலைலைலை காதல் லீலை
செய்செய்செய்செய் காலை மாலை
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனொடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே
நீயே சொல் மனமே
· இசை ·
நீயே நீயே அந்த ஜோதியத்தின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே
நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வாவாவா என் காதல் ஜோடி
நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ...
· இசை ·
வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே...